திருவள்ளுவர் உலகப் புகழ்பெற்ற திருக்குறள் என்னும் அறநூலின் ஆசிரியர். மனித வாழ்வின் அடிப்படை மதிப்புகளான அறம், பொருள், இன்பம் ஆகியவற்றை 1330 குறள்களில் எளிய சொற்களில் எடுத்துரைத்தவர். அவரது கருத்துகள் காலம், மொழி, மதம் ஆகிய எல்லைகளைத் தாண்டி இன்று வரை மனித வாழ்விற்கு வழிகாட்டுகின்றன.இந்நூலில் 133 அதிகாரங்கள் உள்ளன அதில் அறத்துப்பால் 38 அதிகாரமும், பொருட்பால் 70 அதிகாரமும், காமத்துப்பால் 25 அதிகாரம் என்று 10 குறளினுக்கு ஒரு அதிகாரமாக அமைக்கப்பட்டுள்ளது. திருவள்ளுவரது இயற்பெயர்,வாழ்ந்த இடம் உறுதியாகத் தெரியவில்லை எனினும் அவர் பொ.ஊ.மு. முதல் நூற்றாண்டில், தற்போதைய சென்னை நகரில் உள்ள, மயிலாப்பூரில் வாழ்ந்து வந்தார் என்று தமிழக அரசு அறிவித்துள்ளது.
API server busy!